கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் துறைமுக பணியாளர்களின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தொழிற்சங்கங்களுக்கும் துறைமுக நிர்வாகத்தினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊதிய விவகாரங்கள் மற்றும் சில விடயங்களின் அடிப்படையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிரிட்டிஷ் கொலம்பிய துறைமுகங்களைச் சேர்ந்த சுமார் 7,500 பணியாளர்கள் இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தைகள் வெற்றி அளிக்காத காரணத்தினால் பனிப்புறக்கணிப்பை தொடர்வதாக இந்தப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இந்த பணிபுறக்கணிப்பு போராட்டம் பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.