ஆப்கானிஸ்தானில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு செல்ல தலிபான் அரசு தடைவிதித்துள்ள தகவல் வெளியாகி சர்வதேச அளவில் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றது.
பாடசாலை மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல பெண்களுக்கு தடைவிதித்திருந்தது.அதன்பின் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிய தடைவித்தது.
மேலும், பூங்கா, சினிமா மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் வேலை செய்ய பெண்களுக்கு தடைவித்தது.
அந்த வரிசையில் தற்போது காபூல் மற்றும் நாட்டில் உள்ள மற்ற மாகாணங்களில் பெண்கள் அழகு நிலையங்களுக்கு (பியூட்டி பார்லர்) செல்ல தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காபூல் நகராட்சிக்கு நல்லொழுக்க அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர், தலிபான் அரசின் புதிய உத்தரவை நடைமுறைப்படுத்தி பெண்கள் அழகு நிலையங்களில் உரிமத்தை இரத்து செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் மீது தலிபான்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது