தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் 28 வயதான மணித்துரை. இவர் 2015 முதல் இராணுவத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உதயசுருதி என்பவருடன் திருமணம் நடந்தது.ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த மணித்துரை, அண்மையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் அஞ்சலிக்கு பின் தகனம் செய்யப்பட்டது.
தற்கொலை செய்து கொண்ட மணித்துரை, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார் என கூறப்படுகிறது.
இதையடுத்து கடனாளி ஆன அவர் தான் தற்கொலை செய்ய போவதாக தாயாரிடம் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.