கர்ப்பிணித் தாய் ஒரவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருமணமாகி எட்டு வருடங்கள் கழித்து குழந்தை இல்லாததால் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் இருந்ததாக அவரது கணவர் கூறியுள்ளார். வடக்கு மாகொலவில் வசிக்கும் அவரது கணவர் அமில சமரவீர மேலும் தெரிவித்துள்ளதாவது,
குழந்தை கருத்தரித்ததால், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 28 ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இருபத்தி மூன்று வாரங்கள் கருவுற்றிருந்தார். கடந்த 29 ஆம் திகதி இரவு அவர் சிரமப்பட்டார்.
30 ஆம் திகதி காலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது நாள் மதியம், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.