சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தவறான தடுப்புக் காவலில் வைக்கப்படும் அபயம் காணப்படுவதால் அமெரிக்கர்கள் சீனாவுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா – சீனா இடையே ராஜதந்திர ரீதியாக முறுகல் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.