France கடந்த வாரம் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடித்து ஏற்பட்ட கலவரங்களின்போது அரச போக்குவரத்து மிக பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருந்தது.
இதனால் போக்குவரத்து பணியாளர்கள், பயணிகளின் பாதுகாப்பு கருதி அரச போக்குவரத்து சேவைகள் (tramway et bus) இரவு ஒன்பது மணியுடன் தங்கள் சேவைகளை நிறுத்திக் கொண்டது.
இந்த சேவை நிறுத்தத்தால் இரவு நேரப் பயணிகள் மிகப்பெரிய சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று (05/07/2023) மீண்டும் France முழுவதும் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.