மெக்சிகோ-ஓஹஸ்கா மாகாணத்தில் மலைப்பாதைக்கு மத்தியில் பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதேவேளை இந்தியாவின் தமிழகத்தில் புதுக்கோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மேலும், உலகளவில் வாகன விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
வாகன சாரதிகளின் அசமந்த போக்கே இவ்விபத்துக்கள் நிகழ்வதற்கான மிக முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.