அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டில் 3 வெவ்வேறு பகுதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலடெல்பியா, டெக்சாஸ், வால்டிபொர், பொர்ட் ஒர்த் ஆகிய 4 நகரங்களில் திங்கட்கிழமை முதல் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அமெரிக்க சுதந்திர தின விடுமுறை கொண்டாட்டங்களின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.