கனடாவில் இயங்கி வந்த வதிவிட பாடசாலை மயானங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.
கனேடிய நீதி அமைச்சர் டேவிட் லேமிட்டி இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
வதிவிடப் பாடசாலைகளில காணப்படும் மயானங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்த சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான சட்டமொன்றை கொண்டு வருவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மயனங்களை சேதப்படுத்துவோருக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வதிவிடப்பாடசாலைகள் மற்றும் அதனை அண்டிய பகுதிகளை பாதுகாப்பது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.