கொவிட காரணமாக கனேடியர்களின் சராசரி ஆயுட் காலத்தில வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையல் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் கனடாவில் 15600 கொவிட் பெருந்தொற்று மரணங்கள் பதிவாகியிருந்தது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த மரணங்கள் காரணமாக கனேடிய வாழ் மக்களின் சராசரி ஆயுட்காலத்தில் பாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அனைத்து மாவட்டங்களும் ஒரே விதமாக பாதிக்கப்படவில்லை எனவும், கியூபெக் மாகாணம் கொவிட் காரணமாக சராசரி ஆயுட்காலத்தில் பாதக நிலையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.