Home இந்தியா மேற்கு வங்க மாநிலத்தில் கடும் மோதல்

மேற்கு வங்க மாநிலத்தில் கடும் மோதல்

by Jey

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேர்தல் தொடர்பான வன்முறையில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள 73,887 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது.இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந்தேதி நடைபெறும்.

இந்த நிலையில், பல இடங்களில் அரசியல் கட்சிகளிடையே மோதல் போக்கும் காணப்பட்டது. மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் சூழலில், நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே நேற்றிரவு கடும் மோதல் ஏற்பட்டது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது.

பா.ஜ.க. 897 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 7,032 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 38,475 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

 

 

 

related posts