யாழ்ப்பாணம் – தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் என்பவர் 1550 கிலோகிராம் எடை கொண்ட பாரவூர்தியை தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார்.
தென்மராட்சி-மட்டுவில் பகுதியில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் உலக சாதனை நிகழ்வு இடம்பெற்றது.
7 நிமிடம் 48 செக்கன்களில் 1550 கிலோ எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தாடியால் இழுத்தே இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.
ஈழத்து திருச்செல்வத்தின் இந்த சாதனையை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.