Home இந்தியா இந்தியாவில் தெருநாய் ஒன்றினை தத்தெடுத்த இத்தாலிய எழுத்தாளர்

இந்தியாவில் தெருநாய் ஒன்றினை தத்தெடுத்த இத்தாலிய எழுத்தாளர்

by Jey

இத்தாலிய எழுத்தாளரான வேரா லாசரெட்டி, வீதி ஓரங்களில் திரியும் தெருநாய் ஒன்றினை தத்தெடுத்து தன்னுடன் இத்தாலிக்கு கூட்டிச்செல்ல முடிவெடுத்துள்ளார்.

இந்தியாவின் வாரனாசி பகுதியிலேயே இவ்வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா வரும் வேரா லாசரெட்டி, வீதி ஓரங்களில் உணவுக்காக சுற்றித்திரியும் தெரு நாய்களின் நிலைமைகளை கண்டு மனம் நொந்ததன் விளைவே இதுவென தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இம்முறை இந்தியா வந்தபோது தன்னாலான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தையடுத்தே, இந்திய தெரு நாய் ஒன்றை தத்தெடுத்து தன்னுடன் இத்தாலிக்கு அழைத்துச்செல்ல தீர்மானித்துள்ளார்.

“பரிதாபத்துக்குரிய இந்த உயிரினத்தின் மீது நடத்தப்படும் கொடுமைதான், என்னை அதை தத்தெடுக்க வைத்தது” என்று வேரா லாசரெட்டி தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தான் தந்தெடுத்த தெரு நாய்க்கு மோதி என பெயரிட்டு, அதற்கான முறையான கடவுச்சீட்டையும் பெற்றிருக்கிறார்.

மோதியை இத்தாலிக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் சர்வதேச அளவில் இடம்பெற்று வருதாக வேரா லாசரெட்டி தரப்பிலிருந்து தெரியவருகின்றது.

related posts