ஒடிசா – பந்தாசாகி பிரதேசத்தில் தகன மேடையில் பாதி எரிந்த நிலையில் இருந்த இளம்பெண்ணின் உடலை சாப்பிட்ட இருவரை மயூர்பஞ்ச் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 25 வயதுடைய மதுஸ்மிதா சிங் என்ற யுவதி சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, குறித்த யுவதியின் சடலம் அவரது சொந்த ஊரான பந்தாசாகி கிராமத்திலுள்ள தகனச்சலையில் தகனம் செய்யப்பட்டது.
உடல் தகனம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே சுந்தர் மோகன் சிங் மற்றும் நரேந்திர சிங் ஆகிய இருவரும் பாதி எரியுண்ட நிலையிலுள்ள சடலத்தின் சதைகளை சாப்பிட்டுள்ளனர்.
இதனை அறிந்த யுவதியின் குடும்பமும், கிராம மக்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
இது குறித்த விசாரணையில், திருமணமாகாத பெண்ணின் இறைச்சியை உட்கொண்டால் தங்களுக்கு அதீத சக்தி கிடைக்கும்.
அதன் காரணமாகவே அந்த பெண்ணின் உடலை நாங்கள் இருவரும் சாப்பிட்டோம் என சந்தேகநபர்கள் வாக்மூலம் வழங்கியுள்ளனர்.