உக்ரைனுக்கு தேவையான கொத்துக்குண்டுகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட கொத்துக்குண்டுகளை உக்ரைன் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கொத்துக்குண்டுகள் தனக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் தானும் அதனை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்யா தான் கைப்பற்றியுள்ள பெருமளவு நிலத்தில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதால் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவது நியாயமானது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆபத்தான “கிளஸ்டர் வெடிகுண்டுகள்” என அழைக்கப்படும் கொத்து குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க அமெரிக்கா அண்மையில் தீர்மானித்திருந்தது.
அமெரிக்காவின் இந்த தீர்மானத்திற்கு இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நட்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.