அல்ஜீரிய நாட்டில் பஸ் – கார் மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அல்ஜீரியா – டமன்ராசெட் மாகாண சாலையில் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது.
அதிகாலையில் அடோல் கிராமச்சாலையில் பஸ் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. பஸ்சிற்குள் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
இந்த விபத்தில் 32 பயணிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.