நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு பகுதியில் இருந்து சந்தேகத்திற்குரிய வகையில் வெளியேறி, சுங்க சோதனை சாவடி பகுதியை கடந்து சென்ற 2 பேரை அந்நாட்டு வருவாய் துறை அதிகாரிகள் நிறுத்தி, சோதனை நடத்தினர்.
இதில், அவர்கள் இருவரும் 80 முதல் 100 கிலோ எடை வரையிலான தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இரண்டு பேரையும் கைது செய்தனர்.