ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-17, 21-13 என்ற நேர்செட்டில் சீனாவின் லீ ஷி பெங்கை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-13 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சோய் டின் சென்னினை தோற்கடித்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 17-21, 17-21 என்ற நேர்செட்டில் நம்பர் ஒன் வீராங்கனை அகானே யமாகுச்சியிடம் (ஜப்பான்) பணிந்தார்.
பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் 11-21, 21-15, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சயகா ஹோபரா-யுய் சுய்சூ இணையை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.