மத்தியபிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் சிவில் லைன் பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஹிடேந்திர நாத் சர்மா (வயது 40) இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அதே போலீஸ் நிலையத்தில் பி.ஆர். சிங் (வயது 52) சப்-இன்ஸ்பெக்டகராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், போலீஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் மாலை இன்ஸ்பெக்டர் சர்மா வழக்கமான பணியை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, போலீஸ் நிலையத்திற்கு மதுபோதையில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் பி.ஆர்.சிங் தனது துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் ஹிடேந்திர நாத் சர்மா மீது சரமாரியாக சுட்டார். இதில், இன்ஸ்பெக்டர் சர்மாவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சக போலீசார் இன்ஸ்பெக்டரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டரை ஒரு அறையில் வைத்து பூட்டினர். பின்னர், கூடுதல் போலீசார் விரைந்து வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் சிங்கை கைது செய்தனர்.