Home இலங்கை இந்த நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால்……..??

இந்த நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால்……..??

by Jey

இந்த நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால் வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை நாங்கள் கோரவேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கதின் முன்னாள் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 போராளிகளின் நினைவான தமிழ்த் தேசிய வீரர்கள் தினத்தின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(29.07.2023) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டை வலுப்பெறச்செய்ய வேண்டும் என்பதை சிந்திக்காது, தமிழர்களை எவ்வாறு முடக்குவது என்றுதான் இந்த அரசாங்கத்தின் அதிகளவான அரச தலைவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிங்கள மக்களுக்கு தமிழர்களை எதிரியாக காட்டுக்கின்ற செயற்பாடுகளையே சிங்கள தலைவர்கள் முன்னெடுத்துவருகின்றனர். சிங்களத் தலைவர்களின் பலரின் மூளையில் இருப்பதெல்லாம் தமிழர்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மாத்திரமே.

related posts