Home இலங்கை குமுதினி படகில் மீண்டும் இயந்திரக் கோளாறு

குமுதினி படகில் மீண்டும் இயந்திரக் கோளாறு

by Jey

திருத்த வேலைகளின் பின்னர் நெடுந்தீவு பயணிகளுக்காகத் தயாராக இருந்த குமுதினி படகானது மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுச் செயலிழந்துள்ளது.

திருத்த வேலைகளின் பின்னர் குமுதினி படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நிகழ்வு குறிக்கட்டுவான் இறங்குதுறையில் நேற்று காலை (29.07.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்புடன் நடைபெறவிருந்த நிலையிலேயே படகில் மீண்டும் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் மற்றும் நெடுந்தீவு பயணிகளுக்கான கடல்வழிப் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த குமுதினி படகு அடிக்கடி செயலிழந்து வந்துள்ளது.

இந்நிலையில், இந்த குமுதினி படகு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் நிறுத்தப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் படகின் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

படகு திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதனைக் கடலுக்குள் இறக்குவதற்கான நடவடிக்கை அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, படகுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஐந்து தடவை குமுதினி படகு இயக்கப்பட்டது.

related posts