Home இந்தியா வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்

by Jey

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை வடிவமைத்து வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. வணிக ரீதியிலான செயற்கைகோள்கள்

நம் நாட்டு பயன்பாட்டுக்கான செயற்கைகோள்களுடன், வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.

குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வணிக கிளையான ‘நியு ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ (என்.எஸ்.ஐ.எல்) வணிக ரீதியிலான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து வருகிறது.

அதன்படி சிங்கப்பூருக்கு சொந்தமான ‘டி.எஸ்.-சாட்’ எனும் புவி கண்காணிப்பு செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்.எஸ்.ஐ.எல். நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

360 கிலோ எடை கொண்ட ‘டி.எஸ்.- சாட்’ ‘சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார்’ என்ற தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியது. அதாவது, பகல், இரவு என அனைத்து காலங்களிலும் துல்லியமான படங்களை எடுத்து வழங்கும்.

இதனுடன் பல்வேறு விதமான தொழில்நுட்ப ஆய்வுகளுக்காக ‘வெலாக்ஸ்-ஏ.எம்.’ (23 கிலோ), ‘ஆர்கேட்’ (24 கிலோ), ‘ஸ்கூப்’-2(4கி), ‘நியூலயன்’ (3கி), ‘கலாசியா'(3.5கி), ‘ஆர்ப்’-12 ‘ஸ்டிரைடர்'(13கி) ஆகிய 6 செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பிரதான செயற்கைகோளான ‘டி.எஸ்.-சாட்’ உள்பட 7 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

அதை தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கான 25½ மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை தொடங்கியது.

இந்த நிலையில் கவுண்ட்டவுனை முடித்து கொண்டு, நேற்று காலை 6.30 மணிக்கு தீ பிழம்பை கக்கியவாறு பி.எஸ்.எல்.வி. சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

 

related posts