Home இந்தியா அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.23.84 கோடியில் 253 வாகனங்கள்

அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.23.84 கோடியில் 253 வாகனங்கள்

by Jey

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் 2023-24ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கள அலுவலர்கள், செயல்படுத்தப்படும் பணிகளின் தரத்தை கண்காணிக்கவும், உரிய காலத்தில் முடித்திடுவதை உறுதி செய்யவும் கள ஆய்வு மேற்கொள்ளவும் பணிகளை திறம்பட கண்காணிக்கவும் ஏதுவாக புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் பணிகளை திறம்பட கண்காணிக்கும் வகையில், 23 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பிலான 253 வாகனங்களை மாவட்ட ஆட்சி தலைவர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை சென்னை தலைமை செயலக வளாகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து வாகனங்களுக்கான சாவிகளை அலுவலர்களிடம் முதல்-அமைச்சர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

related posts