Home இலங்கை தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

by Jey

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நேற்று (01.08.2023) கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச விசாரணையை முன்னெடுக்க கோரி தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் இலங்கை அரசானது தொடர்ச்சியாக தங்களுக்கு தீர்வை வழங்காத நிலையில் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவண செய்ய வலியுறுத்தி கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

related posts