சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பதிவாகியுள்ளதாகவும், இதுவரையில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழைக்கு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் 27 பேர் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
பெய்ஜிங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 744.8 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.