கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக நாட்டின் புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில் மட்டும் கனேடிய தொழிற் சந்தையில் 68000 பேர் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் நோய்த் தொற்று அச்சுறுத்தல் காரணமாகவே இவவ்hறு பலரும் தொழில் வாய்ப்புக்களை இழந்துள்ளன.
கடந்த மே மாதம் நாட்டின் வேலையற்றோர் வீதம் 8.2 ஆக உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மே மாதத்தில் தொழில் வாய்ப்புக்களை இழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பகுதி நேர பணிகளில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் வாய்ப்பு இழப்பானது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.