இலங்கையில் இதுவரை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள அஸ்பார்டேம்(Aspartame) என்ற இனிப்பானது புற்றுநோயை உண்டாக்கக் கூடிய இரசாயனம் என உலக சுகாதார ஸ்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் ரொஷான் குமார இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் அந்த இனிப்புப் பொருளை உணவில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“சில சட்ட நடைமுறைகள் மூலம் இலங்கையின் நுகர்வில் இருந்து நீக்கப்படும் வரை இதுபோன்ற புற்றுநோயை உண்டாக்கும் உணவுகளை பொதுமக்கள் உட்கொள்வதைத் தடுப்பது அவசியம்.
அதைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியம். E951 எனும் பதார்த்தம் கொண்ட இனிப்பு வகை உணவுகள் இப்போது சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன.