ஒட்டாவாவில் கடத்தப்பட்ட குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை குறித்த குழந்தை தாயிடமிருந்து கடத்திச் செல்லப்பட்டிருந்துது.
இந்த கடத்தல் தொடர்பில் எச்சரிக்கை செய்திகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் காணாமல் போன 11 மாத குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடத்தப்பட்டதாக கூறப்படும் 70 வயதான பெண், இந்தக் குடும்பத்துடன் தொடர்புபடாதவர் என காவல்துறையினர் மேலும் குறிப்பிடுகின்றனர்.
மீட்கப்பட்ட குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.