Home கனடா அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட கனேடிய பாடகி

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட கனேடிய பாடகி

by Jey

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ள டைட்டானிக் புகழ் பிரபல பாடகியான செலின் டயான் தொடர்பில், அவரது சகோதரி முக்கிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

புகழ் பெற்ற டைட்டானிக் திரைப்படத்தில் இடம்பெற்ற ’Every night in my dreams I see you’ என்ற பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், இன்றும் பலரது விருப்பப்பாடலாக அது அமைந்துள்ளது.

அந்தப் பாடலைப் பாடியவர் பிரபல கனேடிய பாடகியான செலின் டயான். அவரது குரலுக்கு பலரும் அடிமையாக உள்ள நிலையில், செலின் அபூர்வ நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

55 வயதாகும் செலின், தான் stiff-person syndrome என்னும் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால், தான் நினைத்தபடி தன்னால் பாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதனால், அவர் பங்கேற்க இருந்த பல இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

related posts