இலங்கை பொலிஸ் அவசர சேவை தொலைபேசி எண்ணான 119 எனும் எண்ணை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
குறித்த அவசர இலக்கமானது 24 மணி நேரமும் இயங்கி வருவதாகவும், நாளாந்தம் 3,000 முதல் 3,500 அழைப்புகள் வரை இதற்கு அழைப்பு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறிப்பிட்ட கால இடைவெளியில் தரவுகளை ஆய்வு செய்த போது, சில நபர்கள் இந்த வசதியை தவறாகப் பயன்படுத்தியதைக் கண்டறிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்