பழங்குடியின மக்கள், இனச் சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே ஒப்புக் கொண்டமை சட்ட ரீதியான பாதிப்புக்களை உருவாக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் கனேடிய அரசாங்கத்தின் பொறுப்புக்கள் குறித்து நீதிமன்றம் சீர்தூக்கிப் பார்த்தால் பாரியளவிலான சட்டத் தாக்கங்கள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் காம்லூப்ஸ் வதிவிடபாடசாலையில் 215 சிறார்களின் சடலங்கள் மீட்கப்பட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
பழங்குடியின மக்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டனர் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமெனவும், காயங்களை ஆற்றுவதற்கான ஆரம்ப முனைப்பாக இது அமையும் எனவும் பிரதமர் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இனச்சுத்திகரிப்பு குறித்து ஒப்புக் கொள்வது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.