Home உலகம் வங்காளதேசம் முழுவதும் டெங்கு காய்ச்சல் – 303 பேர் பலி

வங்காளதேசம் முழுவதும் டெங்கு காய்ச்சல் – 303 பேர் பலி

by Jey

பருவமழைக் காலத்தில் கொசுக்களால் அதிக அளவு நோய் பாதிப்புக்கு உள்ளாகும் நாடாக வங்காளதேசம் விளங்குகிறது.

கடந்த ஜூன் மாதம் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்பட்டதால் வங்காளதேசம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.

நடப்பாண்டில் ஜனவரி முதல் இதுவரை அந்த நாட்டில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் 303 பேர் தீவிர காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் பலர் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் நோய் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

related posts