விருதுநகரைச் சேர்ந்த மாணவர் முத்துமணி என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கில் சுமார் 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் காப்பீட்டு நிறுவனம் மேல்முறையீடு செய்தது.
இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, விபத்தில் உயிரிழந்த மாணவரிடம் லைசென்ஸ் இல்லை எனவும், விபத்திற்கு லாரி ஓட்டுநர் மட்டுமே காரணம் அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இழப்பீட்டு தொகையை நிர்ணயித்து அதில் 50 சதவீதத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் லைசென்ஸ் இன்றி இருசக்கர வாகனம் ஒட்டுவதற்கு பெற்றோர் அனுமதிக்கக் கூடாது என்று நீதிபதி அறிவுறுத்தினார்