துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பிரதான நுழைவாயிலாக மாறியுள்ளது.
ஆப்பிரிக்கா கண்டத்தின் பிற பகுதிகளில் இருந்து, சிறந்த வாழ்க்கையின் நம்பிக்கையில் படகுகளில் ஆபத்தான முறையில் பயணங்கள் செய்கின்றனர்.
இந்நிலையில் விபத்து ஏற்பட்ட கப்பலில் மொத்தம் 57 பேர் பயணம் செய்துள்ள நிலையில் , 16 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான 44 பேரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன் இரண்டு பேர் மீட்கப்பட்டனர்.
அதேவேளை கப்பலில் பயணித்த அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த ஆண்டு கிட்டத்தட்ட 90,000 புலம்பெயர்ந்தோர் இத்தாலிக்கு வந்துள்ளனர்.
இவ்வாறு வந்தவர்களில் பெரும்பாலோர் துனிசியா அல்லது அண்டை நாடான லிபியாவிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.