Home இலங்கை 14ம் திகதியின் பின்னரும் பயணத் தடை தொடரலாம்

14ம் திகதியின் பின்னரும் பயணத் தடை தொடரலாம்

by Jey

எதிர்வரும் 14ம் திகதியின் பின்னரும் நாட்டில் பயணத் தடை தொடரக்கூடிய சாத்தியங்கள் உண்டு என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொவிட் பெருந்தொற்று பரவுவதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் பயணத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மக்களின் செயற்பாடுகளே பயணத் தடை நீடிப்பதா இல்லையா என்பதனை நிர்ணயம் செய்யும் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

related posts