எதிர்வரும் 29ம் திகதி பாடசாலைகள் மீளவும் கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என வெளியான தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் 4 கட்டங்களாக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் தகவல் உண்மைக்கு புறம்பானது என கல்வியமைச்சின் செயலாளர், பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை மீள திறப்பது குறித்து இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கல்வியமைச்சின் செயலாளர் இதன்போது விளக்கமளித்தார்.