மட்டக்களப்பில் டுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
போலி முகவர் ஒருவர் டுபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி ஒருவரிடம் தலா ஒரு இலட்சத்து 35 ஆயிரம் வரை150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை மோசடி செய்துள்ளார்.
குறித்த போலி முகவர் வீட்டை நேற்று (10 .08.2023) பாதிக்ப்பட்டவர்கள் முற்றுகையிட்டு அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியில் அவரது உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்து, நிறுவனம் ஒன்றின் சந்தைபடுத்தல் குழு தலைவர் என்ற போலி அடையாள அட்டையை தயாரித்துள்ளார்.
இந்த அடையாள அட்டையை காட்டி டுபாய்க்கு குறித்த நிறுவனத்தின் அனுசரணையுடன் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் வேலைக்கு அனுப்புவதாக கூறியே இவ்வாறு பண மோசடி செய்துள்ளார்.