Home இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை சந்தித்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களை சந்தித்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்

by Jey

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பு நேற்றைய தினம் (10.09.2023) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் கிழக்கு மாகாண மக்கள் சமகாலத்தில் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆளுநருடன் கலந்துரையாடியிருந்தோம்.

அவற்றில் சிலவற்றுக்கு அவ்விடத்திலேயே செயலாளர்கள் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கும் பணித்திருந்தார்.

பல்லின சமூக நல்லிணக்க விடயங்களில் ஆளுநர் மிக அக்கறை மிக்கவராக அவரது கருத்துக்கள் அமைந்திருந்தன.

மேற்படி சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் படையினரின் வசமுள்ள காணிகளை விடுவிப்புக்கள் செய்வது, மயிலத்தானமடு மாதவனை பிரதேசத்தில் தொடர்ந்தும் அத்துமீறி அபகரிக்கப்பட்டுவரும் மேய்ச்சல் தரை காணிகள் தொடர்பாகவும், கிழக்கில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைகள், சட்ட விரோதமான மண் அகழ்வு, காணி அபகரிப்புகள், காட்டு யானைகளின் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

 

related posts