நைஜீரியாவின் மத்திய பிராந்தியத்தில் அந்நாட்டு ஆயுதப் படையினர் மீது ஆயுதக்குழுவொன்று தாக்குதல் நடாத்தியுள்ளது.
இதன்போது நைஜீரியப் பாதுகாப்புப் படையினர் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவம் நேற்றுமுன்தினம் (13.08.2023) ஞாயிற்றுக்கிழமை இரவு வேளையில் இடம்பெற்றுள்ளது.
அதேவேளை காயமடைந்த படையினரை மீட்பதற்காக சென்ற இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று நேற்று (14.08.2023) திங்கட்கிழமை வீழ்ந்துள்ளது.
உயிரிழந்த 11 படையினரையும் காயமடைந்த 7 படையினரையும் ஏற்றிச்சென்ற நிலையில் இந்த ஹெலிகொப்டர் வீழ்ந்ததாக தன்னை அடையாளம் காண்பிக்க முடியாது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எம்ஐ171 ரக ஹெலிகொப்டர் ஒன்றே வீழ்ந்துள்ளது எi நைஜீரிய விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.