கனடாவில் எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேரை கைது செய்துள்ளது.
போலியாக தயாரிக்கப்பட்ட கனடிய நிரந்தர பதிவிட அட்டைகளுடன் குறித்த நபர்களிடம் சமூக காப்புறுதி அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன.
பெருந்தொகை அட்டைகள் இவ்வாறு மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் துறைமுக நுழைவாயில் இந்த இருவரையும் எல்லை பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து பல்வேறு போலி ஆவணங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களிடமிருந்து 10,000 டாலர் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் நிதிச் சலவையில் ஈடுபட்டனரா? அல்லது பயங்கரவாத நிதியீட்டதடன் தொடர்புடையவர்களா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.