நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர், கடந்த 2019-ம் ஆண்டு அனுப்பப்பட்டு இன்றும் நிலவை சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து உள்ளது. சந்திரயான்-2 ஆர்பிட்டரில் உள்ள நவீன கேமரா எடுத்து அனுப்பிய இந்த புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டு இருந்தது.
இதுவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. நிலவின் மேற்பரப்பில் ரோவரின் இயக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள், அது 8 மீட்டர் அளவுக்கு நகர்ந்திருப்பததாக கூறியுள்ளனர். மிகக்குறைந்த செலவில் செயல்படுத்தப்பட்ட இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் பல நாடுகளால் பாராட்டப்பட்டது.
இது குறித்து பலவேறு நாட்டின் ஊடகங்கள் பாராட்டி செய்திகள் வெளியிட்டன. ஆனால் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாக கருதப்படும் குளோபல் டைம்ஸ், இந்தியாவின் விண்வெளி திட்டத்தை சீனாவுடன் ஒப்பிட்டு சந்திரயான் திட்டத்தை கேலி செய்து உள்ளது.
குளோபல் டைம்ஸ் வெளியிட்டு உள்ள செய்தியில் பல்வேறு துறைகளில் இந்தியாவை விட சீனா முன்னணியில் உள்ளது.
2010 இல் சாங்இ-2 ஏவப்பட்டதில் இருந்து, சீனா ஒரு ஆர்பிட்டர் மற்றும் லேண்டரை நேரடியாக பூமி-நிலவின் சுற்றுப்பாதைக்கு அனுப்பி உள்ளது. ஏவுகணை வாகனங்களின் குறைந்த திறன் காரணமாக இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் இல்லை.