Home உலகம் உகாண்டாவில் சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு

உகாண்டாவில் சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு

by Jey

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் அதிபர் யோவேரி முசெவெனி மனிதாபிமான அடிப்படையில் 200 சிறை கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்க உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து நாட்டின் சிறை கைதிகள் நல அதிகாரி ஒருவர் கூறியதாவது, நாட்டில் உள்ள சிறைகளில் 72 ஆயிரத்திற்கும் அதிகமான சிறை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் உடல் நலக்கோளாறு உடைய கைதிகள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் கைதிகளை தேர்ந்தெடுந்து மன்னிப்பு வழங்க அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு அதிபரும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

அதன்படி 1800 கைதிகளின் பெயர் பட்டியலில் இருந்து 200 பேரை தேர்வு செய்து மன்னிப்பு வழங்கப்படவுள்ளது என்றார்.

கடந்த 2021-ம் ஆண்டு அதிபர் யோவேரி முசெவெனி ஒப்புதலின் பேரில் பொதுமன்னிப்பு கொடுத்து 800 சிறை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

related posts