ரணிலின் அரசாங்கம் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்வதங்குரிய இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளது.
அந்த செயற்றிட்டம் நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு பட்டிருப்பு பாலத்தை அமைப்பதற்கு நான் முன்னுரிமை வழங்குவேன் என ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நேற்று (31.08.2023) விஜயம் செய்திருந்த அவர் பல்வேறு அபிவிருத்தித்திட்ட பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணககை அம்மன் வீதியை திறந்து வைத்து கருத்துத் தெரிவிக்கையியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
”மாணவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட வீதியை அடுத்த வருடம் செப்பனிட்டுத் தருவேன். வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஆவணமாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார விடுதலையைப் பெறுவதற்கு நடவடிக்கை
எனினும் ஆவணங்களில் இருந்தாலும் கையிலே இல்லாமல் உள்ளது.
கடந்த 30 வருடங்களாக ஏற்பட்டிருந்த யுத்த நிலமையை நான் கூறித்தான் மக்கள் அறிய வேண்டியதில்லை.