தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பாக கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 20 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காசோலையினை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் .சிவ.வீ. மெய்யநாதன் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, இ.ஆ.ப., தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் அ.வ.வெங்கடாசலம்., இ.வ.ப., மற்றும் உறுப்பினர் செயலர் முனைவர் சா.செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.