Home சினிமா தமன்னா சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள்

தமன்னா சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள்

by Jey

தமன்னா 2005-ல் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவரது முதல் தமிழ் படம் கேடி. விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறார்.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ஆடிய காவாலய்யா பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது அரண்மனை 4-ம் பாகம் பேய் படத்தில் நடித்து வருகிறார். தமன்னா சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் ஆகிறது.

இதையடுத்து அயன், தோழா, பாகுபலி, ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் தான் நடித்த கதாபாத்திரங்களை வீடியோவாக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் தமன்னா வெளியிட்டுள்ள பதிவில், “இளமை காலத்து கனவுகள் முதல் பருவம் வரை துன்பத்தில் இருக்கும் ஒரு பெண், பக்கத்து வீட்டு பெண், மோசமான பவுன்சர், தற்போது பயம் இல்லாத புலனாய்வாளர் வரை… என்ன ஒரு அற்புதமான பயணம்.

இந்த 18 வருட பயணத்தில் எனது உண்மையான முதல் காதல் நடிப்பு மட்டும்தான். இந்த அற்புதமான விஷயங்களை நினைவு கூற கொஞ்சம் நேரம் கிடைத்தது.

அதை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இத்தனை வருட சினிமா பயணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்

related posts