ரேஷன் கடைகளில் 80 கோடி மக்களுக்கு நவம்பர் வரை உணவு தானியங்கள் இலவசமாகவே வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
நாட்டில் பாதிப்பு சூழல் குறைந்து வரும் நிலையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று (திங்கள்கிழமை) உரையாற்றினார். அப்போது தடுப்பூசிகள் தட்டுப்பாடுகளுக்கான தீர்வு, மாநிலங்களுக்கு இலவசமாகவே தடுப்பூசி என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
இதுதவிர ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை இலவசமாக உணவு தானியங்கள் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம், 80 கோடி மக்கள் பயனடையவுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.