ஒன்றாரியோ மாகாணத்தில் நாளாந்த கொவிட் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த எட்டு மாதங்களில் முதல் தடவையாக கொவிட்19 நோய்த் தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கை 600 விடவும் குறைவடைந்துள்ளது.
கடந்த ஒரு வார காலத்திற்கான நாளாந்த கொவிட் தொற்று உறுதியாளர் சராசரி எண்ணிக்கை 735 ஆக குறைவடைந்துள்ளது.
பரிசோதனைகளில் நோய்த் தொற்று உறுதியாவோரின் விகிதம் 4.3 என்பதிலிருந்து 3.6 ஆக குறைந்துள்ளது.
அண்மைய நாட்களாக மாகாணத்தில் கொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.