இலங்கையின் கடல் எல்லைகளைத் தாண்டிச் சென்று சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் மனிதாபிமான நடவடிக்கையாக ஒரு வார காலத்தினுள் விடுவிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.
ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் சர்வதேச எல்லைகளைத் தாண்டி தொழிலில் ஈடுபடுவதனால் ஏற்படக்கூடிய பாதகங்கள் தொடர்பாகவும் இதன்போது அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
அகில இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படகு உரிமையாளர் சங்கத்துடன் நேற்று (0409.2023) அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.