றொரன்டோவில் கோடைகால முகாம்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
ஒன்றாரியோவில் கொவிட் சுகாதார கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது.
இன்றைய தினம் முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 5ம் திகதி வரையில் இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
வழமையாக றொரன்டோவில் நடைபெறும் கோடை கால முகாம்களில் உள்ளடங்கும் விடயங்கள் உள்ளடக்கப்பட உள்ளதாகவும், சுகாதார விதிகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், அன்றாட மருத்துவ பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட உள்ளது.
றொரன்டோவில் இந்த தடவை 35000 இடங்களில் கோடைகால முகாம்களை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.