வடகொரியாவில் எந்தவொரு தலையீடுகளும் ஏற்படாதிருக்க அந்நாட்டு தலைவர் கிங் ஜோன் உன் புதிய சட்டவிதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளார். இச்சட்டவிதிகளை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுமென அறிவிக்கப்படுகிறது.
வடகொரியாவில் வெளிநாட்டு திரைப்படத்தையோ ஆடைகளையோ நிபுணத்துவ வெளியீடுகளையோ பயன்படுத்துவது முற்று முழுதாக தடை செய்யப்படுகிறது. இதற்கமைய தென்கொரியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள்தாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவர் வசித்து வந்த கிராமம் பொலிசாரால் முற்றுமுழுதாக பரிசோதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது. எல்லைகள் ஊடாகவே அல்லது ஏனைய செயற்பாடுகள் ஊடாகவோ வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகின்ற வீடியோ காட்சிகளை வடகொரியாவுக்கு எடுத்து வருவோர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துமாறு ஆலோசனை வழங்கப்ப்ட்டுள்ளது.